Thursday, August 4, 2011

                           உறவுகள் மேம்பட  

வாழ்க வையகம்                                      வாழ்க வளமுடன்
குடும்பத்திலும் சரி அலுவகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க :-
நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்....
அர்த்தமில்லாமலும், பின்விளைவை அறியாமலும் பேசிகொண்டேயிருபதை விடுங்கள்....
எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசுக்காக கையாளுங்கள். விட்டுகொடுங்கள்....
நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதிடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்....
சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும்  என்று உணருங்கள் .
உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்க கேட்டதை அங்கே  சொல்வதையும் அங்கே  கேட்டதை இங்கே
சொல்வதையும் விடுங்கள்.
அவ்வபோது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள் .
பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.
மற்றவர்க்குரிய மரியதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்..
மற்றவர் கருத்துகளில், செயல்களை, நடக்கின்ற நிகழ்சிகளைத் தவறாக 
புரிந்து கொள்ளாதீர்கள் .

அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

                                       ......................தத்துவ ஞானி வேதாந்த்திரி மகரிஷி .
கடைபிடித்து  நலமுடன் வாழுங்கள்.    அன்புடன்  ஜே. 

No comments:

Post a Comment